தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

தேசத்தை கட்டியெழுப்பும் வகையில் இளைஞர்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கான வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குதல் என்ற வாசகத்தை குறிக்கோளாக கொண்டு இளைஞர்களுக்கு திறன்பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களின் வேலைபெறும் திறனை அதிகரித்து, தொழிற்சாலைகளில் தேவைகளை பூர்த்தி செய்வதன் வாயிலாக திறன்மிகு மையமாக தமிழகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்கீழ் 2013ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான முதன்மை நிறுவனமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 37 தொழில்பிரிவுகள், 122 பயிற்சி நிறுவனங்கள், 1013 தொழில் பிரிவுகளுடன் குறுகிய கால திறன் பயிற்சி, MSME திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம், முன்பே கற்ற திறனை அங்கீகரித்தல், திறனற்றவர், பகுதி திறன் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் திறன்னுயர்வு தேவைகளுக்கான பன்முகத்தன்மை கொண்ட திட்டங்களை செயல்படுத்திவருகிறது. தங்கள் திறனை மேம்படுத்தி தொழில்துறையில் வெற்றியடைய நினைக்கும்,இளைஞர்கள் https://www.tnskill.tn.gov.in/ta/ என்ற இணையதள முகவரியின் மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொண்டு பயனடையலாம்.

Related posts

காஞ்சிபுரம் மண்டலத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் முகாம்

சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; ரூ20.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்