தமிழக காங்கிரஸ் சார்பில் 23ம்தேதி பிரதமருக்கு ரூ.1001 நிதி அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாளைமுன்னிட்டு, சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.1000 மட்டுமே கொடுத்திருக்கிறது. இதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு 23ம்தேதி ரூ.1001 ஐ அனைத்து மாவட்ட தலைவர்களும், தமிழக மக்களும், பிரதமர் மோடிக்கும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரயில்வே துறை அமைச்சருக்கும் அனுப்பி வைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், விஜய்வசந்த் எம்பி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், இல.பாஸ்கர், டி.செல்வம், ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட தலைவர் முத்தழகன், மயிலை தரணி, சூளை ரஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!