தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 57.84 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 98.18% குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் வகையில் போலியோ சொட்டு மருத்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் முகாமானது மாலை 5 மணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் படி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று (03.03.2024) இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள். இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 57.84 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 98.18% குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்