டெல்லி சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பிக்கள் அவருக்கு வரவேற்பு!

டெல்லி: குடியரசுத் தலைவரை சந்திக்க காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலும் கலைஞர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக நேற்று இரவே டெல்லி செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். இரவு 8.30 மணிக்கு டெல்லி நோக்கி புறப்படும் விமானத்துக்காக காத்திருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தின் வி.ஐ.பி. அறையில் காத்திருந்தனர். ஆனால் இரவு 9.30 மணியை தாண்டியும் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்படாததால், தனது டெல்லி பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.04.2023) காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். தற்போது அவர் டெல்லி சென்றடைந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பிக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இன்று காலை 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி