தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை. விழுப்புரம், தேனி, கோவை, நீலகிரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ,கோவை, நீலகிரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related posts

சாலையே இல்லாத வயல் வெளியில் பாலம் கட்டிய பீகார் அரசு

ஒரு சில கிராம் கணக்கிற்காக தகுதியிழப்பு செய்ததால் உங்கள் உத்வேகத்தையும் சாதனைகளையும் குறைக்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

6 வகையான அசைவ தொக்கு… 3 வகையான அசைவ குழம்பு…