தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 அப்ரன்டிஸ்கள்

பயிற்சி: Diploma Apprentices (Technician Apprentices).
மொத்த காலியிடங்கள்: 500.
உதவித் தொகை: ரூ.8,000.
பயிற்சி காலம்: 1 வருடம்

துறை வாரியாக அப்ரன்டிஸ்கள் விவரம்:

Electrical and Electronics Engineering- 395, Electronics and Communication Engineering- 22, Electronics and Instrumentation Engineering-9, Computer Engineering/Information Technology-9, Civil Engineering-15, Mechanical Engineering-50.தகுதி: அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் ஆகஸ்ட் 8ம் தேதி ‘போட்’ இணையதளத்தில் வெளியிடப்படும்.

‘போட்’ இணையதள முகவரி: www.boat-srp.com.

நேர்முகத் தேர்வு ஆக.28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களுடைய கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்குறிப்பிட்ட இணையதளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Top Down Button ஐ கிளிக் செய்து, அதில் TANGEDCO நிறுவனத்தை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்