தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கொடைக்கானல் பகுதியில் 70மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, கரூர்பரமத்தியில் நேற்று அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு