தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தூதர்களாக நியமனம்

புதுடெல்லி: இந்திய சேவைத்துறையை சேர்ந்த இரண்டு தமிழர்கள் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அமைச்சரவையின் பணியமர்த்துதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை: உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வரும் தமிழரான 2002ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி செந்தில் பாண்டியன், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் தூதர்- நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் பிறந்த இவர் அந்த பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிப்பார்.

மற்றொரு தமிழரான 2005ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரி எம்.பாலாஜி. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் உள்ள இந்திய துணைத்தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, ஆசிய வளர்ச்சி வங்கியில் செயல் இயக்குநர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விகாஷ் ஷீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தில் செயல் இயக்குநரின் ஆலோசகராக ஈஐஆர்எஸ் அதிகரி பர்வீன் குமாரும், பிலிபைன்சின் மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியில் செயல் இயக்குநரின் ஆலோசகராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சாரங்கியும், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு ஐஆர்எஸ் அதிகாரி கல்யாண் ரேவல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தன அமைப்பில் தனு சிங் என்பவர் முதன்மை செயலர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்