தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடியில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக நேற்று வெயில் நிலவியது. தமிழ்நாட்டில் தற்போது வறண்ட வானிலை காணப்படுவதால், வெயில் மற்றும் ெ வப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதுரை விமான நிலையம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, ஈரோடு, காரைக்கால், பாளையங்கோட்டை, புதுச்சேரி, திருத்தணி, தஞ்சை, அதிராம்பட்டினம், திருச்சி, பரங்கிப்பேட்டை, நாகை, கடலூர், ஆகிய இடங்களில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது.

இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலை கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. கடலூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, சேலம், தூத்துக்குடி, கோவை, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை, நீலகிரி, கோவை, தர்மபுரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெயில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கும். வெப்ப நிலை என்பது ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். இது தவிர, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று இன்றும், நாளையும் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்