தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 95.62% அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 95.62% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 95.86% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் 3092 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 2,964 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. பகல் 3 மணி நிலவரப்படி விழுப்புரம் கோட்டத்தில் 91.29%, சேலம்-98.96% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கோவை -93.60%, கும்பகோணம் -95.02%, மதுரை – 98.43%, நெல்லை-99.10% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி