தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்” என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பாக 11.12.2023 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் “பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்” என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் 20 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, சமூக நல ஆணையர்/தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வே. அமுதவல்லி,
மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் தொடக்கமாக, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு அரசின் மகளிர் குறித்த திட்டங்கள். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய செயல்பாடுகள் மற்றும் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த திட்ட விளக்கப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர். காளிராஜ், இயக்குநர். NCSRC பிரியங்கா அனூன்சியா, உலக அழகி, சிங்கப்பூர், கிறிஸ்டோபர் ஹாட்ஷஸ், அமெரிக்க ஐக்கிய தூதரக ஜெனரல் மற்றும் கிளைர் வில்கின்சன், துணை தலைவர், IJM ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத் துறையில், மகளிர் உரிமைகளை மேம்படுத்த செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் திட்டங்கள் குறித்தும், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தமிழகத்தில் பெண்களின் உரிமை காக்கும் நடவடிக்கைகளை குறித்தும் பேசினார்கள். மேலும், பெண்ணே இதோ உன் சட்ட உரிமைகள் என்ற புத்தகம் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் மகளிரின் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக பேசினார். பெண்களை முன்னேற்றுவதற்கான தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய செயல் திட்டங்கள் என்ற புத்தகம் சமூகநலம் -மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் அவர்களால் வெளியிடப்பட்டது. பின்னர், தினந்தோறும் உலக அளவில் பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறைகள், அதனை தடுக்கும் முறைகள், காரணங்கள் குறித்து வல்லுநர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டது.

மேலும், சர்வதேச சட்ட வழிமுறைகள், சட்டங்களை அமல்படுத்துதல், சமூகத்தை பயன்படுத்தி குற்றங்களை குறைத்தல், அரசியல் மற்றும் வழிமுறைகளை வலுப்படுத்துதல், குற்றங்களை தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகள், திருநங்கையர்களை பாதிக்கும் குற்றங்கள். ஆன்லைன் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள். தடுப்பதற்கான வழிமுறைகள். பாலியல் கடத்துதல், தடுப்பதற்கான வழிமுறைகள், பாலியல் வியாபாரம். வல்லுநர்களால் கருத்துகள் பரிமாறப்பட்டது. குற்றங்களை தடுத்தல் ஆகியவை பற்றி பேசினார்கள்.

பின்னர் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ராமேஷ், பவானி சுப்பராயன், திருமதி ஆர்.என்.மஞ்சுளா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. மேலும் துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. தேசிய அளவில், மாநில அளவில் மகளிர் அதிகாரம் அளித்ததில் சாதனை புரிந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர். மாநில சட்ட நிறுவன இயக்குநர். கூடுதல் அட்வகேட் ஜெனரல், வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி