Saturday, June 29, 2024
Home » தமிழக வெற்றி கழகத்தில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல்

தமிழக வெற்றி கழகத்தில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல்

by MuthuKumar

சென்னை: நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியிருந்த நிலையில் அடுத்த 15 மணி நேரத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான வாட்ஸ் ஆப், டெலிகிராம், இணையத்தளம் உள்ளிட்டவற்றிகான QR cord மற்றும் லிக்குகளை தவெக தலைவர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

குறிப்பாக மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த உறுப்பினர் சேர்க்கையானது 15 மணி நேரத்திற்குள் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணபித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பலர் ஒரே சமயத்தில் விண்ணப்பித்துள்ளதால் பலருக்கு குறுஞ்செய்தியானது தாமதமாக அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறியிருந்தார்.

You may also like

Leave a Comment

one + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi