தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம்; சீரான தூத்துக்குடி நெல்லை வழித்தடத்தில் மீண்டும் இயக்கம்

சென்னை: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து சேவைகள் முடங்கின. இந்நிலையில் இம்மாவட்டங்களில் பேருந்து சேவைகள் தொடங்கிய நிலையில், தூத்துக்குடியில் இன்று முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி: சென்னை – தூத்துக்குடி இடையே 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது. நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது. சென்னை எழும்பூர்-தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல இயக்கப்பட்டது.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – எழும்பூர் விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் ரயில் மதியம் 1.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். எழும்பூர் – திருச்செந்தூர் செல்லும் ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டு பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் திருநெல்வேலியில் பகுதியளவு ரத்து செய்யப்படும்.

ஸ்ரீ வைகுண்டம் செய்துங்கநல்லூர் ரயில்நிலைய தண்டவாள பனியால் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்ல சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் முப்பதிவில்ல ரயில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருத்துவரில் சிறப்பு ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்லும். இன்று முதல் ஜனவரி 19-ம் தேதி வரை இயக்கப்படும் எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயில் மேல்மருத்துவரில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர்28 முதல் ஜனவரி 18 வரை இயக்கப்படம் நெல்லை-எழும்பூர் சிறப்பு ரயில் மேல்மருத்துவரில் நின்று செல்லும்

திருச்சி ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் 2 நாடுகளுக்கு தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். இன்று நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும். எழும்பூர்-குமரி(12633), கன்னியாகுமரி-எழும்பூர் (12634) விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நிறுத்தப்படும். எழும்பூர் – கொல்லம் (16101), கொல்லம்-எழும்பூர் (16102) விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நிறுத்தப்படும்.

 

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்