தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது இந்த வடகிழக்குப் பருவமழைதான். வடகிழக்குப் பருவ மழையால் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மழை தமிழகம் பெறுகிறது

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவக் காலத்தில் குறைந்த அளவு மழையை மட்டுமே பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 45 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது.

27-ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் 2 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அட்டவணைப்படி உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்