தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சாலைகளும் பாலங்களும் தவிர்க்க இயலாதவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் மற்றும் மேம்பால பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி கடந்த ஈரண்டாக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தொய்வில்லா நிர்வாகத்தை ஏற்படுத்தவே தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் கூறியுள்ளார்.

தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சாலைகளும் பாலங்களும் தவிர்க்க இயலாதவை.சாலைப்பணிகள், பாலப்பணிகள் நடைபெறும் காலங்களில் போக்குவரத்து சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

சாலை மற்றும் பாலப் பணிகளை உரிய காலத்தில் முடித்துவிட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சாலைப் பணி, பாலப் பணிகளை மேற்கொள்ளும் போது தேவையற்ற தாமதம் கூடாது. 50 ஆண்டுகள் கடந்து நிற்கும் சென்னை அண்ணா மேம்பாலத்தினை நினைவுகூர்ந்து மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சென்னை மாநகருக்கு அழகு சேர்க்கும் அண்ணா மேம்பாலத்தை 1973 ஜூலை 1-ல் கலைஞர் திறந்து வைத்தார். 50 ஆண்டுகள் கடந்தும் கட்டுறுதி குறையாமல் அண்ணா மேம்பாலம் இன்னும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. கத்திப்பாரா சந்திப்பு, பாடி சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு பாலங்கள் திமுக அரசின் சாதனைக்கு எடுத்துக்காட்டு என்றார். தமிழ்நாட்டில் எண்ணற்ற சாலைகள், பாலங்கள் திமுக அரசின் சாதனையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி மாநிலமாக தொடர்ந்து திகழ அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு