வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

சென்னை: வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம்: விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளி கைது

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது