தமிழகத்தில் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் அம்மா: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் அம்மா என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் அம்மா அவர்கள் தான் என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31பெண்‌ சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா அவர்களுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி