தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடகா, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

டெல்லி: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒருசில கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வந்த சூழலில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை மழை பொழிவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போல தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் அடுத்த 7நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த்துள்ளது.

தொடர்ந்து கேரளா, கர்நாடகவிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பது கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் அடுத்த 5நாட்களுக்கு மிக கனமழைகான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல கேரளாவிலும் இன்றும் நாளையும் மிககனமழைக்கான எச்சரிக்கையும் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை: ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம், போதைப்பொருள் விற்பனையை தடுக்க கிராம அளவிலான கண்காணிப்பு குழு

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்