தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. கிராம பொதுமக்கள் முன்னிலையில் புனித நீர் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஈரோட்டில் கொண்டத்து பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டு கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி அடுத்த உருவையாறு முத்துமாரி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோரும் குடமுழுக்கில் பங்கேற்றனர்.

 

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி