தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: சென்னையில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை விமான நிலையம்: 39.7 ° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.6 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கடந்த நான்கு நாள்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில், நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் விடிய விடிய மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், லேசான வெயிலும் நிலவி வருகின்றது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கேசவ விநாயகத்தை விசாரிக்க நீதிமன்ற அனுமதி தேவை என்ற உத்தரவு ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!