தமிழ்நாட்டில் 10, 11 ஆகிய 2 நாட்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட்

டெல்லி: தமிழ்நாட்டில் 10, 11 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 14-ம் தேதி வரை 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 9ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வின்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து ரெட் ஹில்ஸ் 6 செ.மீ., வேப்பூர் 5 செ.மீ., ஏற்காடு , சோலையார், சூலூர், தேனாம்பேட்டை, கீழ் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவானது.

Related posts

கொல்கத்தா RG கார் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!!

முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி..!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு