தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று
தமிழகத்தில் 15 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அமியம் கூறியுள்ளது. தற்போது மதுரை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோரிப்பாளையம், கே.கே.நகர். தெப்பக்குளம், அண்ணாநகர், தெற்குவாசல், சிம்மக்கல், அவனியாபுரம், வில்லாபுரம், சிந்தாமணி, பெருங்குடி, திருநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது கனமழை பெய்துவருகிறது.குந்தாரபள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், வேப்பனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை செம்பரம்பாக்கத்தில் கடந்த 2 மணி நேரத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, போரூர், மாங்காடு, குன்றத்துரில் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 2 மணி நேரத்தில் 5 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி