தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று உருவான தாழ்வு பகுதியானது தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவியது. இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வருகிறது. மேலும் குமரி கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை , ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு