தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வட்டி வதைத்த நிலையில் நேற்று இரவிலிருந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு அளித்துள்ளனர்.

கனமழை எதிரொலி காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் உள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று இரவில் இருந்து பெய்த மழையால் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு சென்ற வாகனங்கள் நீரில் சிக்கியது. பல்வேறு இடங்களில் மழை அதிகமாக பெய்துவருவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

Related posts

இணையதள சர்வர் கோளாறு : நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடும் பாதிப்பு!!

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது