தமிழக தேர்தல்களில் தொடர் தோல்வி.. 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரசியலுக்குள் குதிக்கும் தமிழிசை சவுந்தரராஜன்.. வரலாற்றை மாற்றி எழுதுவாரா?

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு வசதியாகவே ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை, “ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தீவிர அரசியலுக்கு வருகிறேன். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறேன். தொகுதி குறித்து பாஜக தலைமை அறிவிக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தமிழிசை கடந்து வந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் பயணத்தின் வெற்றி, தோல்விகளை பார்க்கலாம்.

*2006ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி,

*2009ம் ஆண்டு வட சென்னை மக்களவை தேர்தலில் தோல்வி,

*2011ம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்ற தொகுதியிலும், அதை தொடர்ந்து 2016 ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் இல்லம் அமைந்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி

*கடந்த 2019 ம் ஆண்டும் கூட நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் கனிமொழியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதைத் தொடர்ந்து பாஜக தலைமை தமிழிசை அவர்களுக்கு கடந்த 2019 ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநர் பதவி கொடுத்தது. இதனிடையே புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி 2021ல் நீக்கப்பட்டார். இதையடுத்து தெலங்கானா கவர்னராக பதவி வகித்து வந்த தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில துணை நிலை பதவியும் வழங்கப்பட்டது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!