தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது: தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு

சென்னை: தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்; தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

கடுமையான பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட் ஆதரவளிப்பதை வரவேற்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு தேவையான பேரிடர் நிவாரண நிதி ரூ.38,000 கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வழங்கவில்லை. பேரிடர் நிவாரண நிதியாக கிட்டத்தட்ட ₹38,000 கோடி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பேரிடர்களில் இருந்து மீள முடியாமல் எங்கள் மாநிலம் திணறி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு அளப்பரியது. 2024 பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது

முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணத் தவறியதோடு, தமிழ்நாட்டிற்கான உரிய நிவாரணத்தை வழங்கவும் மத்திய அரசு தவறியுள்ளது. இது போன்ற புறக்கணிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமின்றி, கூட்டாட்சி தத்துவத்தின் ஆன்மாவையும் குலைக்கிறது. பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டிற்கான உரிய பங்கை வழங்கி, ஒன்றிய அரசு நியாயமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை!