தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு

மதுரை: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘டிஎன்பிஎஸ்சி தரப்பில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்களின் பட்டியலை வழங்கியுள்ளது. இவர்களின் சான்று உண்மையா என சம்பந்தப்பட்ட பல்கலையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் தாமதம்? விசாரணைக்கு யார் ஒத்துழைக்காவிட்டாலும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்படுவர். சான்றுகளை பெற்று, அவை உண்மையா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related posts

தொடர் விடுமுறையால் குவிந்தனர் கொடைக்கானலில் விடுதிகள் ‘ஹவுஸ் புல்’

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்