தமிழ் பல்கலை விழா கவர்னர் பங்கேற்பு அமைச்சர் புறக்கணிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று 100 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 86 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 212 மாணவர்களுக்கு முதுநிலை பட்டமும் உள்பட மொத்தம் 656 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். அதேபோல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரும் புறக்கணித்தனர்.

Related posts

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு