தமிழர் திருநாளின் வரலாறு

தமிழர் வரலாற்றில் சங்ககாலத்தில் இருந்தே மருதநிலமும், உழவர்களும் உழவு தொழிலின் பெருமைகளும் அதிகம் பேசப்படுகின்றன. மாரி மழை முடிந்து வயல்களில் விளைந்த புதுநெல் கொண்டு புது வாழ்வை ஆரம்பிப்பதாக நம்புகிறார்கள். உலகின் எல்லா உயிர்களது வாழ்வியலில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் அத்தொழிலின் மேன்மையையும் இந்நாளில் உலகமே நினைவில் கொள்ள வேண்டும் என்பது தார்ப்பரியமாகும். இவ்வுலகம் நிலை பெற சூரியன் சக்தி முதலாகும். சூரியனின்றி பயிர்கள் வளராது. உயிர்கள் செழிக்காது. மழையும் பொழியாது. ஒளியும் கிடைக்காது. இந்நாளில் சூரியனை வணங்கி, புது பானையில் புது அரிசியில் பால், சர்க்கரை, பயறு, நெய் மற்றும் தேன் சேர்த்து பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிடுவர். அதற்கு அடுத்த நாள் ஏர் இழுக்கும் மாடுகளுக்கும் பால் தரும் மாடுகளுக்கும் பட்டி பொங்கல் இடுவதும் வழக்கமாகும். இச்சம்பிரதாயங்கள் தமிழர் வாழ்வியலின் அழகியலை எடுத்துக்காட்டுகின்றன. சக உயிர்களையும் மதித்து உணவளித்து பேணும் தமிழர் பண்பாடு போற்றுதலுக்குரியதாகும்.

Related posts

சஞ்சலத்தை போக்கும் தபோவனம்

ஒரே திருக்கோயிலுக்குள் 4 திவ்ய தேசங்கள்

காணம் விற்றோனும் ஓணம் கொண்டாடணும்