தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் யுவராஜா

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை யுவராஜா ராஜினாமா செய்துள்ளது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து முறைப்படி கடிதத்தை யுவராஜா கொடுத்துள்ளார்.

அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜா ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு புதிய இளைஞரணி தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜி.கே.வாசனுக்கு ஏற்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி

ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!