தமிழறிஞர்கள் 100 பேருக்கு உதவித்தொகை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார்

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக, 2022-2023ம் ஆண்டிற்கு தேர்வு செய்யபப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ‘தந்தை பெரியார் கூட்ட அரங்கில்’ வழங்குகிறார்.

தமிழறிஞர்கள் 100 பேரில் சென்னை மாவட்டத்தில் 7 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேரும், வேலூர் 2 பேர், திருவண்ணாமலை 3 பேர், விழுப்புரம் 2 பேர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கருர், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடிஎன மொத்தம் 35 மாவட்டங்களில் இருந்து 100 அறிஞர்கள் உதவித்தொகைக்கான அரசாணையை பெறவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரசாணை வழங்கி விழா பேருரையாற்றுகிறார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன் தொடக்கவுரையும், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சத்தியபிரியா நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.

Related posts

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது