தமிழ்நாடு சுற்றுலா விருது விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 26ம் தேதி வரை நீட்டித்து ஆணையர் சமயமூர்த்தி அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 3வது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 27ம் தேதி வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகள் சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும். மூன்றாவது தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்-2024க்கான விண்ணப்பத்தை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதியை நீட்டித்து 26ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்

மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு