தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கது: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சேலம்: தமிழகத்தில் காலை உணவு திட்டம் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், பாஜ சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

2020ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்தில், காலை உணவு திட்டம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டம் வழங்குவது வரவேற்கத்தக்கது. இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது.

அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீட் தேர்வு மிகவும் அவசியமான ஒன்று. நீட் தேர்வில் ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தேர்வில் தவறு செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால், புதிய சட்டத்தின்படி 10 ஆண்டு தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி