ஆகஸ்ட்டில் வறண்ட வானிலை நிலவியதால் தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை 9.72 சதவீதம் அதிகரிப்பு: தென் மண்டல மின் பரிமாற்ற மையம் தகவல்

சென்னை: வறண்ட வானிலை நிலவியதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.72 சதவீதம் மின்நுகர்வு அதிகரித்து உள்ளதாக தென் மண்டல மின் பரிமாற்ற மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று எப்போதும் இல்லாத உச்சகட்டமாக தமிழகத்தில் 19,387 மெகாவாட் மின் தேவை இருந்தது. அதே நாளில், 423.78 மில்லியன் யூனிட் மின்நுகர்வு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தெற்கு மண்டலங்களில் மின் கட்டமைப்புகளின் தேவை அதிகரித்து வருவதாகவும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 51.68 ஜிகா வாட்டாக இருந்த அதிகபட்ச தேவை இந்த ஆண்டு 63.84 ஜிகா வாட்டாக இருந்தது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடர்ந்து 60 ஜிகா வாட்டை தாண்டி மின் தேவை இருந்தது. மேலும் வறண்ட வானிலை காரணமாக மின் தேவை அதிகரித்துள்ளதாக தென் மண்டல மின் பரிமாற்ற மையம் கூறியுள்ளது. இது குறித்து தென் மண்டல மின் பரிமாற்ற மைய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் உச்ச மின் தேவை 16,411 மெகாவாட்டாக இருந்தது இந்தாண்டு 9.72 சதவீதம் அதிகரித்து 18,007 மெகாவாட்டாக இருந்ததாக மத்திய மின்சார ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு மொத்தமாக 9,885 மெகாவாட் அதிகமாக பெற்றுள்ளது.

இது தொடர்பாக மின் பரிமாற்ற மையம் எச்சரிக்கை செய்தும், அவசர செய்திகள் வழங்கியும், சீரான இடைவெளியியில் அதிகளவில் மின் நுகர்வு காணப்பட்டது. இது போல அதிகளவில் நுகர்வது கட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். மாநில மின் உற்பத்தி நிலையங்கள், ஒன்றிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிராந்திய மின் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட அளவில் குறைவாக உற்பத்தியே மின்சார குறைபாட்டிற்கு காரணமாக அமைந்தது. அக்டோபர் முதல் வாரம் வரை தென் மண்டலங்களில் தேவை அதிகமாக இருக்கும். உற்பத்தி பிரச்சினையை தீர்க்க ஒரு செயல் திட்டத்தை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தென் மண்டல அதிகாரக் குழுவினர் வரவிருக்கும் கூட்டத்தில் இந்த பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ’ஓவியச் சந்தை’

அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி சந்திப்பில் உடன்பாடு; ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: இன்று நடக்கும் உச்சி மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து