தமிழகம் கேட்கும் நிதியை தருவதில்லை: எடப்பாடி பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிவாய்ப்பை இழந்துள்ள போதும் உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஒவ்வொரு மக்களவை தொகுதி வாரியாக, அதில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம்.

பாஜவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. ஒன்றியத்தில் எந்த அரசு வந்தாலும் நாம் கேட்கும் நிதியை கொடுப்பது கிடையாது. அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் தலைவாசலில் முழுக்க முழுக்க மாநில நிதி ரூ.1000 கோடியில், 1050 ஏக்கரில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட கால்நடைப்பூங்கா 3 ஆண்டுகளாக இன்னும் திறக்கப்படவே இல்லை’’ என்றார்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.