தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தமிழ்நாடு மின்வாரியம். தற்போது மின்வாரியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. குறைந்த பணியாளர்கள் இருப்பதால் மின்வாரியத்தில் பல குளறுபடிகள் ஏற்படுகிறது.

மேலும், புதிதாகக் கட்டப்படும் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் இணைப்புக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு காரணம் போதுமான அதிகாரிகளும் உபகரணங்களும் இல்லாததுதான். எனவே மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களைப் பணிநியமனம் செய்து மக்களுக்கு எந்தவித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

வயநாடு நிலச்சரிவு.. வரைபடத்தில் இருந்தே காணாமல்போன பூஞ்சேரிமட்டம் கிராமம்: மீண்டும் மக்கள் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை!!

விசாரணை முடிக்காத வழக்குகள் எத்தனை? என்று அறிக்கை தர ஆணை