சென்னை: அண்ணாநகரை சேர்ந்த தோல் மருத்துவர் தினேஷ் குமார். . இவருக்கு சர்வதேச தோல் மருத்துவ சங்கங்களின் (ILDS) சார்பில் இளம் தோல் மருத்துவர் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த 25வது உலக தோல் மருத்துவ மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 12,000க்கும் மேற்பட்ட தோல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 100 ஆண்டுகளுக்கும் மேலான ஐஎல்டிஎஸ் வரலாற்றில் இளம் தோல் மருத்துவர் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தினேஷ்குமார்.
உலக தோல் மருத்துவ மாநாட்டில் தமிழக டாக்டர் தினேஷ்குமாருக்கு விருது: இந்திய அளவில் முதன்முறையாக சாதனை
previous post