தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் உலகளவில் எடுத்து கொண்டால் ஒ்வ்வொன்றும் தனி நாடாகவும் இருந்திருக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள்தொகை 27 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடும். நிலப்பரப்பின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 6188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இது சென்னையை விட 15 மடங்கு அதிகமாகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இணையான மக்கள் தொகை கொண்ட தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் பிரிக்கப்பட வேண்டியவை தான்., 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

Related posts

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும் மவுண்ட் எட்னா: எரிமலை வெடிப்பால் கேடானியா விமானங்கள் ரத்து

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!!