தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக, நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எதிர்பாராதவிதமாக மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100 மெகாவாட்டாகவும், ஏப்ரல் மாதத்தில் 18,500 மெகாவாட்டாகவும் இருக்கும் என மின் வாரியம் கணக்கிட்டுள்ளது. எனினும், அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மின் நுகர்வு 42.37 கோடி யூனிட் என்ற உச்சத்தை எட்டியது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ““தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக, நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது; இதற்கு முன்பு கடந்த ஏப்.19ல் மின் நுகர்வு 41.82 கோடியாக இருந்தது.சென்னையின் நேற்றைய 20/04/2023 மின் நுகர்வு 3788 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 14/06/2022ல் 3763 MW ஆகும்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்