தமிழக பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி துறைமுகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு தலையிட்டு தீர்வு காண கோரிக்கை!!

தூத்துக்குடி: கேரள மீனவர்கள் தமிழக கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களும், தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் அதிகாலை புறப்படும் விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 9 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்.

கடந்த சில மாதங்களாக விசைப்படகுகள் கரை திரும்பியதும் கேரள மீனவர்கள் அத்துமீறி தமிழக பகுதியில் நுழைந்து இரவில் மீன்பிடிப்பதாக தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் காலை கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கேரள மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக துறைமுகத்திலேயே நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு