தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நடப்பு கல்வி ஆண்டில் பொதுப்பிரிவு கலந்தாய்வில் முதல் சுற்றில் முதல் 3 நாட்கள் மாணவர்கள் தங்களுக்கான விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மே 6ம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பதிவு நடைபெற்றது. சுமார் 2 லட்சத்து 53ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்று அவர்களுக்கு தரவரிசை பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் அதே போல 22ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை சிறப்பு பிரிவில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் என இரண்டு பிரிவுகளுக்காக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

836 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் செப்டம்பர் மாதம் வரை பொது பிரிவு கலந்தாய்வு என்பது நடைபெற உள்ளது. மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இன்று தரவரிசை எண் 1 முதல் 26,654 வரை மாணவர்கள் பொதுப்பிரிவில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை இணையதளமான www.tneaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கடவு சொல் ஆகியவற்றை கொடுத்து தங்களுக்கான விருப்ப கல்லூரியை தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து 7.5 சதவீத உள்ளஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்களும் இன்றைய தினம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்த 1343 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். அதே சமயம் கட்-ஆஃப் மதிப்பெண் 200 – 179.00 வரை 2,267 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களும் இன்று கலந்துகொள்கின்றனர். அவர்கள் ஒரே சுற்றாக இந்த கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 30,264 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். முதல் 3 நாட்கள் மாணவர்கள் தங்களுக்கான விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக 4வது நாள் காலை மாணவர்கள் தேர்தெடுத்திருக்க கூடிய விருப்பப்பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கான தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்கள் அதனை இரு நாட்களுக்குள் இறுதி செய்யவேண்டும்.

அதன்படி மாணவர்கள் இறுதி செய்திருக்கக்கூடிய கல்லூரியின் ஒதுக்கீட்டு ஆணை என்பது 7ஆம் தேதி அவர்களின் இணைய தளத்திற்கு அனுப்பப்படும். அதனை அவர்கள் பதிவிறக்கம் செய்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் tneaonline.word என்ற இணைய தளத்திலோ அல்லது மாணவர் சேர்க்கை மையங்களிலோ சென்று தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது