தமிழ்த் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா: சேப்பாக்கத்தில் டிசம்பர் 24ம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட துரையின் அனைத்து சங்கங்களையும் ஒருங்கினைத்து டிசம்பர் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த விழாவில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டான் முரளி கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பது மகிழ்ச்சி என்றார். இந்த விழாவிற்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் உட்பட அனைவர்க்கும் அழைப்பு விடுதிருப்பதாகவும் விரைவில் விஜய், அஜித் உள்ளிட்டோரை அழைக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விழாவை இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் செல்வமணி தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு கியு.ஆர்.கோர்டுடன் இலவச பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்