தாம்பரம் ஆணையர் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: தாம்பரம் ஆணையர் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அமலாக்கப்பிரிவு (மதுவிலக்கு) சிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக், தாம்பரம் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், குற்ற ஆவணக்காப்பக ஏடிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படை ஏடிஜிபியாகவும், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும், அந்தப் பதவியில் இருந்த வினித் தேவ் வாங்டே, தலைமையிட ஏடிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி ஐஜியாக உள்ள அன்பு, அதே பிரிவில் காலியாக உள்ள ஏடிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார். சைபர் கிரைம் ஏடிஜிபி சஞ்சய்குமார், கடலோர காவல்படை ஏடிஜிபியாகவும், கடலோர காவல்படையில் இருந்த சந்தீப் மிட்டல், சைபர் கிரைம் ஏடிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜீவ்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு டிஜிபியாகவும், அந்தப் பதவியில் இருந்த தமிழ்சந்திரன், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியகவும், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, தென் மண்டல ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த கண்ணன், தென் சென்னை கூடுதல் கமிஷனராகவும், வடசென்னை கூடுதல் கமிஷனராக இருந்த அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐஜியாகவும், வடக்கு மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், வடசென்னை கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, சேலம் கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த விஜயகுமாரி, ஆயுதப்படை ஐஜியாகவும், அந்தப் பதவியில் இருந்த லட்சுமி, திருப்பூர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு