தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்கள், போலீசார் பங்கேற்பு

தாம்பரம்: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போதைப்பொருள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தாம்பரம் பேருந்து நிலையம் அருகே, தாம்பரம் மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து நேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, போதைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல, குரோம்பேட்டை காவல் நிலையம் சார்பில் குரோம்பேட்டையில் உள்ள அரசினர் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. இதில், குரோம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் மாணவர்கள், போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது