தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணைக்கு அழைத்தால் செல்லவேண்டும் எனவும் பாஜக அமைப்பு செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.4 கோடி எடுத்து சென்றபோது பிடிபட்டது. வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கும் அளிக்கும்படி கேசவ விநாயகத்துக்கு | சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்