அடுத்தாண்டு ஜனவரிக்குள் பணிகள் முடிவடையும் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கம்: நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு

சென்னை: தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்படுகிறது. 37 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில், அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் நிறைவடையும். தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில், சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகள் இவற்றை கருத்தில்கொண்டு, பெருநகரின் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுக்க பல மாநகராட்சிகள், நகராட்சிகள் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம் மற்றும் வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதேபோல், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரிவாக்கம் செய்யப்படவில்லை. மாறாக சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன.

தாம்பரம் மாநகராட்சி விரிவாக்கம்: அதன்படி, தாம்பரம் மாநகராட்சியில் அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கைவாசல், மதுரப்பாக்கம், மூவரசன்பட்டு, மூவரசம்பேட்டை உள்ளிட்ட 18 கிராமங்கள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் மாநகராட்சி 84.7 சதுர கிமீ அளவில் இருந்து 172.34 சதுர கிமீ வரை வளரும், இது கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் நான்கில் ஒரு பங்கு அளவு. இணைப்பின் மூலம் அதன் மக்கள் தொகை 7,23,017ல் இருந்து 10,08,473 ஆக உயரும். 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக மாநகராட்சி அமைக்கப்பட்டபோது முதலில் விலக்கப்பட்ட ஊராட்சிகளைச் சேர்க்கும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்: ஆவடி மாநகராட்சிக்கு திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகளும், வானகரம், அயப்பாக்கம், நெமிலிச்சேரி, அடையாளம்பட்டு, நடுக்குத்தகை, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், வரதராஜபுரம், பாரிக்காடு, நசரத்பேட்டை, அகரம் மேல், பானவீடு தோட்டம், பாரிவாக்கம், கண்ணபாளையம், சோரஞ்சேரி ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் மோரை, வெள்ளானூர், பழவேடு, மேப்பூர் ஆகிய 19 கிராம ஊராட்சிகளுடன் இணைக்கப்படும். சோரஞ்சேரி, மோரை, வெள்ளானூர், பழவேடு மற்றும் மேப்பூர். இந்த இணைப்பின் மூலம் ஆவடி மாநகராட்சி 65 சதுர கிலோ மீட்டரில் இருந்து 188 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்து அதன் மக்கள் தொகை 3,45,996லிருந்து 6,95,212 ஆக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிராம பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்காலம், 2024ம் ஆண்டு இறுதி வரை, அதன் பின், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் மொத்தம் 37 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்