புளியோதரை… In South India

பிடிக்கிறதோ, இல்லையோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டுப் பார்க்கும் ஓர் உணவு புளியோதரை. நமது பயணங்களுக்கு எப்போதும் துணைபுரிவது இந்தப் புளியோதரைதான். ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது பெரிய அளவிலான பாத்திரங்களிலோ புளியோதரையை அடைத்துக் கொடுத்துவிட்டால் டெல்லிக்குக் கூட பசி, பட்டினியின்றி போய்வந்துவிடலாம். கெட்டுப்போகாமலும் இருக்கும். உடலுக்கு பெரிய அளவில் தொந்தரவும் தராது. இதனால் பயணம் செல்பவர்களுக்கு முதல் சாய்ஸாக புளியோதரைதான் இருக்கிறது. மேலும் புளியோதரை கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படுவதால் இது கடவுளின் உணவு என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய புளியோதரை தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மற்ற தென்மாநிலங்களில் கோலோச்சி வருகிறது. ஆனால் அங்கெல்லாம் சிற்சில மாற்றங்களோடு தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரா புலிஹோரா

ஆந்திரா என்றாலே காரம்தான். இங்கு பச்சை மிளகாயை பச்சையாகவே பயன்படுத்துவார்கள் என்பது நமக்குத்தெரியும். அந்தளவுக்கு ஆந்திராக்கார்கள் காரம் விரும்பிகள். புளியோதரையை மட்டும் காரம் இல்லாமல் சாப்பிடுவார்களா? ஆம். ஆந்திராவின் புளியோதரை காரமான புளியோதரை. பச்சை மிளகாய், உடைந்த குண்டூர் மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய்த்தூள் ஆகிய காரக் காரணிகளை தாராளமாக பயன்படுத்தி இங்கு புளியோதரை செய்கிறார்கள். இதை ஆந்திராவில் புலிஹோரா என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

கர்நாடகா புளியோகரே

கர்நாடகாவில் புளியோதரைக்கு பெயர் புளியோகரே. உளுத்தம்பருப்பு, வெந்தய விதைகள், கொத்தமல்லி விதைகள் மற்றும் சிவப்பு மிளகாய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி இந்த புளியோகரேவைத் தயாரிக்கிறார்கள். புளிச்சாறு, வெல்லம் மற்றும் கறிவேப்பிலையையும் இந்த புளியோகரேவில் சேர்க்கிறார்கள். இதனால் இங்கு சற்று இனிப்புச்சுவையுடன் திகழ்கிறது புளியோகரே. நம்ம ஊரில் புளியோதரைக்கு பெரும்பாலும் வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கிறோம். கர்நாடகாவில் வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்க்கிறார்கள். இது அவர்களுக்கு தனித்த ருசியைத் தருகிறது.

கேரளா புளியின்ஜி

கேரளாவில் தயாரிக்கப்படும் புளியோதரைக்கு புளியின்ஜி என பெயர். அங்கு பிரபலமாக அறியப்படும் ஓணம் சதய விழாவில் புளியின்ஜிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக்காக இது அங்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கடுகு உள்ளிட்ட பொருட்கள் புளியின்ஜிக்கு சுவை கூட்டுகின்றன. மெலிதான இனிப்புச்சுவைக்காக வெல்லமும் சேர்க்கப்படுகிறது.

 

Related posts

பெண்களுக்கு மாதம் ரூ.2,000 .. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,000 : காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி!!

‘’இதுபோன்ற பெண்கள் இருக்கும் வரை மரணம் நடக்கும்’’ கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

23 வயது காதலியை மணந்த 18 வயது கால்பந்து வீரர்