பெங்களூரு தனியார் பள்ளி பாட புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்: பெற்றோர் கடும் எதிர்ப்பு


பெங்களூரு: பெங்களூரு மாநகரின் ஹெப்பால் பகுதியில் இயங்கி வரும் சிந்தி பள்ளியில் 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சிந்தி வகுப்பினரின் வரலாறு குறித்த பாடம் உள்ளது. கடந்த 1947 முதல் 1962 வரை சிந்தி வகுப்பினர் வாழ்வியல் முறைகள், இழந்த உரிமைகள், வகுப்பில் பிறந்து சாதித்தவர்கள் என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் நடிகை தம்மன்னா பாடியா குறித்தும் பாடம் இடம் பெற்றுள்ளது.

ஒரு நடிகை எப்படி எதிர்கால மாணவர்களின் வாழ்க்கையில் ரோல் மாடலாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் பெற்றோர்கள். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கடுமையாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் கர்நாடக மாநில சிறுவர் உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்..

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது