தையல் மிஷின்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா?

பெரும்பாலோனோர் வீடுகளில் தையல் மிஷினை பார்க்கமுடிகிறது. பல தேவைகளுக்காக பெண்கள் வீட்டிலேயே இயந்திரம் வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தையல் மிஷினை சரியாகச் சுத்தம் செய்யாவிட்டாலோ, எண்ணெய் விடாமல் இருந்தாலோ அது பழுதாகிவிடும். இதோ பராமரிக்க சில பயனுள்ள ஆலோசனைகள்.

1. இந்த பாகங்களுக்கு எண்ணெய் விடுங்கள் துணியை தைப்பதற்கு முன்பு மிஷினின் ஊசி ஷட்டில் பாயின்ட், பாபின், நூல் போடும் வட்டு போன்ற பாகங்களில் எண்ணெய் விடவும்.
2. பெடல்களைச் சுத்தம் செய்யுங்கள் காலால் இயக்கும் மிஷின்களை வைத்திருந்தால் பெடல்களைச் சுத்தம் செய்ய மறவாதீர்கள். இதற்கு, பெடலில் இருக்கும் திருகு அல்லது முடிச்சில் எண்ணெய் விடவும்.
3. பவர் மிஷினை கவனமாக பராமரியுங்கள் பவர் மிஷின் என சொல்லப்படும் எலக்ட்ரானிக் தையல் மிஷினை சுத்தம் செய்ய, ஒரு கப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும். அதில் காட்டன் துணியை நனைத்து எடுத்து மிஷினை சுத்தம் செய்யவும். பின்பு பாபின் நூல் போடும் வட்டு ஆகியவற்றில் எண்ணெய் விடவும்.
4. ஊசியை கவனமாகப் பராமரியுங்கள் வெவ்வேறு ஆடைகளை தைக்க வெவ்வேறு ஊசிகள் உள்ளன. இந்த விஷயத்தில் துணிகளுக்கு ஏற்ப ஊசியைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இரும்பு தையல் மிஷின் இரும்பு தையல் மிஷினில் ஏதேனும் துரு இருந்தால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி அதை எளிதாகச் சுத்தம் செய்யலாம்.
6. தைக்கும் முறை மிஷினில் தைக்கும் துணியை கடினமாக இழுக்க வேண்டாம். அவ்வாறு செய்வதால் துணி கிழியலாம் அல்லது மிஷினுக்கும் சேதம் ஏற்படலாம்.
7. இந்த காரணத்தினால் மிஷின் பழுதடைகிறது தடியான துணிகளை தைத்தாலோ, துணிகள் பலமுறை மாட்டிக்கொண்டாலோ தையல் மிஷின் பழுதடையும். இதை மனதில் கொண்டு மிஷினில் கவனமாக துணிகளை தைக்கவும்.
– கவிதாபாலாஜிகணேஷ்.

Related posts

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா