தச்சூர்-சித்தூர் சாலை பணி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

விழுப்புரம்: தச்சூர் – சித்தூர் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வுசெய்தார். காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை நகரங்களுடன் இணைக்கும் 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. அதானி துறைமுகத்தில் ஆய்வுசெய்த பின், தச்சூர் – சித்தூர் சாலை அமைக்கும் பணியை ஆய்வுசெய்தார். சாலை பணிகள் முடிந்துள்ள தூரம், சாலை பணிகளின் நிலை ஆகியவற்றை அதிகாரிகளிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார். கொடுக்கப்பட்ட கால கட்டத்தில் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தினார்.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்